பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும், பொலிஸாரை தாக்குவோர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸாருக்கும் எச்சரிக்கை
அத்துடன், குறித்த இடங்களில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்லை மீறுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடாத காரணத்தினால் பொலிஸாருடன் மோதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அனைத்து மக்களிடமும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.