நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் வரை இந்த அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்து வரும் இரண்டு நாட்களில் மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்திலும் மழை பெய்யலாம் எனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதனால் ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam