சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டு விசாரணை! இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை( வீடியோ)
போர்க்குற்றம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை,சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எ
எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு நீதித்துறையில் நம்பிக்கையின்மையே இதற்கான காரணம் என்று இன்று அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நீதியமைப்பு தொடர்பாக தாம் பெருமைப்படுவதாக நீதியமைச்சர் அலி சாப்ரி கூறுகின்ற போதும், இலங்கையின் மக்களும், சர்வதேசமும் பெருமைப்படவில்லை.
மாறாக, இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையில்லை என்று விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.
நீதியமைச்சர் அலி சாப்ரியை பொறுத்தவரையில் மத்திய வங்கியின் ஆளுநரை போன்றவரல்ல. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிட்ச் அறிக்கை வந்தால் உடனடியாக மாற்று அறிக்கையை வெளியிடுவார் என்று எரான் விக்கிரமரட்ன குறிப்பிட்டார்.
நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளன. வழக்கு தாக்கல் செய்யப்படுவதும் அது சட்டமா அதிபரால் மீளப்பெறப்படுவதை நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன.
இந்தநிலையில் இலங்கையின் நீதித்துறையில் சத்திரசிகிச்சை அவசியம். வெறுமனே பிளாஸ்டர் கொண்டு அதனை சீ்ர் செய்யமுடியாது.



