நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு! சுகாதார பிரிவில் இருந்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மருந்துகளுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடும் மருந்து தட்டுப்பாடு
இலங்கைக்கான மருந்து விநியோகம் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.