நதிகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை
இலங்கையில் நதிகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆற்று வடிநிலப் பகுதிகளில் வசிப்போருக்கு இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெதுருஓயா, மஹாஓயா, அத்தனகலுஓயா, களனி கங்கை, பென்தர ஆறு, கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் கலா ஓயா கங்கை உள்ளிட்ட ஆற்று வடிநிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் குறிப்பிடத்தக்களவு நீர்மட்ட உயர்வினை எதிர்பார்க்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அவதான நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வடிகாலமைப்புத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இன்றும், நாளையும் மழையுடனான காலநிலை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம் என்பனவற்றின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய நிலைமைகளும் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




