விவசாயிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாட்டின் விவசாயிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பெரும்போக செய்கைக்காக அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு நான்கு வகையான உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உரங்களை பயன்படுத்தாத விவசாயிகளுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர வகைகளை பயன்படுத்தி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அரசாங்கம் அதற்கான நட்டஈட்டை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாறாக அந்த உரத்தை வைத்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் நட்டஈடு வழங்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri