மட்டக்களப்பில் இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர், பைசர் , தடுப்பூசிகள் மற்றும் முதலாம் இரண்டாம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நாளை வியாழக்கிழமை முதல் மட்டு மாநகரசபை மண்டபம் மற்றும் சத்திருக்கொண்டான் சர்வோதயா மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் இன்று தெரிவித்தார்.
கோவிட் தடுப்பூசி ஏற்ற ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் 28 ம் திகதியுடன் ஒருவருட பூர்த்தி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இருந்தபோதும் இந்த ஒருவருடத்தில் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இதனடிப்படையில் இதுவரை தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி ஏற்றாத அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாத இடைவெளியில் இந்த தடுப்பூசிகளை ஏற்றமுடியும்.எனவே அவர்களும் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளவும்.
இந்த கோவிட் தொற்றின் பாதிப்பை இல்லாமல் செய்ய ஒரே ஒரு வழி இந்த தடுப்பூசியை
ஏற்றுவது தான். எனவே இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலதாமதம் இன்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு
அவர் தெரிவித்தார்.



