இலங்கையில் மாறுபாடு அடைந்த மற்றுமொரு கோவிட் வைரஸ் பரவலாம் என எச்சரிக்கை
தென்னாபிரிக்காவில் பரவும் புதிய மாறுபாடு அடைந்த கோவிட் வைரஸ் இலங்கையிலும் தோற்றம் பெறும் ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது ஆபத்தான நிலைமையாகும். இந்த நிலைமையில் மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு தீர்மானங்கள் எடுப்பதற்கு நேரிடும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய திருமணங்கள் மற்றும் மரண நிகழ்வுகளை தவிர வேறு எந்த நிகழ்விலும் மக்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மீளவும் தனிமைப்படுத்தல் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி கோரி வர வேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அனுமதிகளை மீறி மக்கள் ஒன்று கூடினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கும் ஏற்பாடு செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
மேலும் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




