நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் அபாயம்
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று
நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சியால், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஒரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
