நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் இன்று (19.04.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
பலத்த காற்று வீசும்
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri