‘Mu’ கோவிட் பிறழ்வு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
கடந்த ஜனவரி மாதத்தில் கொலம்பியாவில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் ‘Mu’ எனப்படும் மற்றுமொரு கோவிட் பிறழ்வு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Mu எனப்படும் B.1.621 எனப்படும் புதிய பிறழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துமாறு ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிறழ்வு தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிந்துகொள்வதற்கு மேலதிக மதிப்பீடுகள், ஆய்வுகள் அவசியம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த புதிய பிறழ்வு, தென்னாபிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
