நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.