மரணங்கள் ஏற்படலாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஆண்டு விசர் நாய்க்கடி நோயினால் 14 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன.
இது நாட்டின் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்த வருடாந்த மரண எண்ணிக்கை என தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
மரணங்கள் ஏற்படும் ஆபத்து
பதிவான 14 மரணங்களில், 12 மரணங்கள் விலங்குகள் கடித்தமையால் ஏற்பட்டுள்ளன. ஒரு மரணம் விலங்கு பிராண்டியமையாலும் (Scratch), மற்றுமொரு மரணம் அடையாளம் தெரியாத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 31-40 வயதுடைய இளைஞர்கள், 41-50 வயதுடைய நடுத்தர வயதினர், 71-80 வயதுடைய முதியவர்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பூனைகள் கடித்தல் மற்றும் பிராண்டுதல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக லியனபத்திரண எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துமாறு அறிவிறுத்தல்
"கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பூனைகளின் மூளை மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றிடையே விசர் நாய்க்கடி நோய் பரவல் அதிகரித்துள்ளதைக் அவதானித்துள்ளோம். பூனை கடிப்பது போன்றே, பூனை பிராண்டுவதும் (Scratch) ஆபத்தானது," என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி ஏற்றப்படாத செல்லப்பிராணிகளாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்:
மேலும் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்குத் தவறாமல் தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri