இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசக்கூடுமென இலங்கை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை உருவாகியுள்ளதாகவும் இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு, மற்றும் மேல் மத்திய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் பகுதிகளுக்கு சென்று தற்பொழுது மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் முடிந்தளவு சீக்கிரம் கரை திரும்ப வேண்டுமெனவும் அல்லது பாதுகாப்பு இடமொன்றிற்கு செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
