இந்த பெண் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை
சீனப்பெண் ஒருவரை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய உளவுத்துறை அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய நன்கொடையாளரான சீனப் பெண் ஒருவர், சீன உளவாளி என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Christine Lee (58) என்ற சீனப்பெண் பிரித்தானிய உறவை வலுப்படுத்துவதற்காக என்று கூறி, தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் Christine Lee, லண்டன் அலுவலகம் ஒன்றில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
லண்டனிலுள்ள சீன தூதரகத்தின் சட்ட ஆலோசகராகவும், கடல் கடந்த சீன விவகாரங்கள் அலுவலகத்தின் சட்ட ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
பிரித்தானிய முன்னாள் பிரதமரான தெரஸா மே Christine Leeயின் ’சேவையை’ பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவமொன்றும் நிகழ்ந்துள்ளது.
சீனப்பெண் Christine Lee குறித்த செய்தியொன்று பிரித்தானிய உள்நாட்டு உளவு ஏஜன்சியான MI5 பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீன அரசின் உளவாளியான ஒருவர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பணியாற்றி வருகிறார். அவர் நமது செயல்பாடுகளைக் குலைப்பதற்காக இரகசியமாக செயல்பட்டு வருகின்றார்.
எனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருக்கவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Christine Lee கைது செய்யப்படவோ, நாட்டிலிருந்து
வெளியேற்றப்படவோ இல்லை, ஆனால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை மெமோ ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.