ஜேர்மன் நகரமொன்றின் குழாய் நீர் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஜேர்மன் (Germany) நாட்டின் கொலோன் (Cologne) நகரில் வாழும் சுமார் 10,000 மக்களுக்கு குழாய் நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரிலுள்ள விமான நிலையம் ஒன்றில் இராணுவத் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றும் குழாய் நீர் வேண்டுமென்றே மாசுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் விநியோக அமைப்பு அமைந்துள்ள இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலியில் துவாரம் இடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாலேயே இந்த சந்தேகம் உருவாகியுள்ளது.
தீவிர விசாரணைகள்
இதேவேளை, அந்த பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மெச்செர்னிச் (Mechernich) நகரிலுள்ள இராணுவத் தளம் ஒன்றுக்கு நீர் விநியோகிக்கும் அமைப்பும் மாசுப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, அப்பகுதிகளில் வாழும் சுமார் 10,000 மக்களுக்கு, குழாய் நீரை பருக வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இராணுவத் தளங்களிற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது சில இடங்களில் குழாய் நீரை அருந்த தடை நீக்கப்பட்டாலும், மக்கள் தண்ணீரை கொதிக்கவைத்து பருகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை ஜேர்மன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |