நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டத்திற்கு' அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக பின்வரும் மாகாணம் மற்றும் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது:
சபரகமுவ மாகாணம், கொழும்பு, கம்பஹா, குருநாகல் அனுராதபுரம், வவுனியா, அம்பாந்தோட்டை, மொனராகலை
உடல்நலப் பாதிப்புகள்
அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பின்வரும் உடல்நலப் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது:
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், வேலைகளில் ஈடுபடுவதாலும் அதிக சோர்வு ஏற்படலாம்.

போதிய ஓய்வின்றி தொடர்ந்து வெயிலில் வேலை செய்வதால் உடலில் தசைப்பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்துமாறும், இயன்றவரை நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri