திடீரென அதிகரிக்கும் நீர் மட்டங்கள் - பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமானது துனமலே பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் அப்பகுதிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் களு கங்கையின் கிளை ஆறான குடா ஓயாவுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று (17.05.2026) விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, குறித்த நீர்நிலையைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே, குறித்த ஆறுகளை அண்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அனர்த்த அபாயம் உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் தமக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் உடமைகளை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பவற்றின் அறிவிப்புக்களை கவனமாக அவதானிப்பதும் முக்கியமான விடயமாகும்.
மேலும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் முன்னதாக சிறியளவிலான சீரற்ற காலநிலைக்கே பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் பகுதிகளை சேர்ந்த மக்கள் கட்டாயம் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்வது உயிர்ச்சேதங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.