வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த சமூக ஊடக பிரச்சாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த சமூக ஊடக அமைப்புக்களின் ஊடான பிரச்சாரங்கள் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் போலி விளம்பரங்களுக்கு யாரும் சிக்கிவிட வேண்டாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து பல்வேறு போலி விளம்பரங்கள் ஊடாக மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றவியல் விசாரணை பிரிவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிபத்திரம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்குவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் விளம்பரம் செய்வது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றச் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri