குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை
அதிகளவிலான ஆற்றல் இழப்பு பெரும்பாலும் பழைமையான மின் சாதனங்களால் ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த இழப்பு பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹர்ஷ விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகப் பொருட்கள்
“ஆய்வுகளின் போது, இலங்கையில் திறமையற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பதை நாங்கள் அறிந்தோம்.
இந்தப் பிரச்சனை பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளில் காணப்படுகிறது.
மேலும் குளிரூட்டியால் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.. மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் மூன்றில் ஒரு குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மின்சார நுகர்வு
இதன் காரணமாக, மாதத்திற்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் மின்சார நுகர்வு உள்ளது. மேலும், இலங்கைக்குள் திறனற்ற உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் ஏர் கண்டிஷனர்களுக்கும் இதே விதி கடுமையாக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
