கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான எச்சரிக்கை!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கான பிரதான வீதி சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள வீதியால் பயணிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கான பிரதான வீதியில் காணப்பட்ட பாலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சேதமடைந்து போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பாலம் தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் போக்குவரத்து பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பெய்யும் மழை காரணமாக குறித்த பாலம் மற்றும் வீதி
என்பன வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றது அத்துடன் கனகாம்பிகை குளம் மற்றும்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான வயல் நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவு
நீர் குறித்த வீதியை குறுக்கறுத்து பாலத்தால் செல்வதனால் இந்த பாலத்தின் ஊடாக
பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ
பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
