இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
சன நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது, நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது முக்கியம் என கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக சுவாச நோய் அறிகுறிகள் இருப்பின் முக கவசம் அணிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் வைரஸின் திரிபு
சிக்கன்குன்யா மற்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால், முதல் சில நாட்களில் அனைவரும் நுளம்பு வலையைப் பயன்படுத்துவது முக்கியம் எனவும் இதனால் மற்றவர்களுக்கு நோய் பரவுவது தடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை அல்லது வேலையிலிருந்து வீடு திரும்பிய பிறகு அல்லது வெளியில் சென்ற பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவுவது முக்கியம் எனவும் முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கோவிட் வைரஸின் திரிபு உருவாகும் போக்கு காணப்படுவதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri

பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
