நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு
இதன் காரணமாகக் கடற்பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு, கற்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வழியாக மன்னார் வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கும் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




