நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Sri Lanka Navy Climate Change Sri Lanka Fisherman
By Rukshy Dec 11, 2024 04:57 AM GMT
Report

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு  கடற்றொழிலாளர்களை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் வடக்கு இலங்கைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு

காலி வரையான கடற்பரப்பு

அந்தவகையில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Warning For Sea Areas Climate Change Sri Lanka

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து வடமேற்கு திசைக்கு மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையிலும் வீசக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் திசை மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Warning For Sea Areas Climate Change Sri Lanka

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினை : விரைவில் சஜித் வெளியிடவுள்ள பெயர் விபரங்கள்

மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!

மின் கட்டண குறைப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானம்!


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US