கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கர்ப்பிணிப் பெண்கள் மத்தியில் கோவிட் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், கர்ப்பிணிகள் நெரிசலான இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான பேராசிரியர் சனத் லான்ரோல் கருத்து வெளியிடுகையில்,
"கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.
இதனால் இரண்டாவது தடுப்பூசி போட்டு மூன்று மாதங்கள் ஆகிறது என்றால், அந்த தாய்மார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
இதேவேளை, நாளாந்த கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 800 ஐத் தாண்டியது. நேற்றைய தினம் பதிவான கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 829 ஆக இருந்தது.
இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,536 ஆக அதிகரித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
