ஒன்லைனில் கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர், அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் வெளியான விளம்பரத்தின் அடிப்படையில் இரத்தினபுரி நகரிலுள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் நவீன கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளார்.
தொலைபேசியின் விலை 60 ஆயிரம் ரூபா என்று விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விண்ணப்பதாரருக்கு கையடக்க தொலைபேசிக்கு பார்சல் விநியோகம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
கொரியர் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலை வீதியிலுள்ள இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
இந்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விண்ணப்பித்தவரின் பெயருக்கு வந்த பார்சலை வழங்கிவிட்டு 61,000 ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.
அவரும் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று ரசீது கொடுத்துவிட்டு சென்றார். கையடக்கத் தொலைபேசி அடங்கிய பார்சலை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மாணவன், அதனைத் திறந்து பார்த்தபோது பார்சலுக்குள் வைக்கோல் மற்றும் சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்தது.
இதற்காக கிடைத்த ரசீது குறித்தும் கொரியர் நிலையத்திற்கு சொந்தமானது எனக்கூறி விசாரித்தபோது அது உண்மையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
61 ஆயிரம் ரூபாயை செலுத்திய பின்னர் குறுந்தகவல் வந்த கையடக்க தொலைபேசிகள் அணைத்துக் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.