சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 18 மாவட்டங்களில் காலநிலையால் மாற்றத்தால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் 12 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 797 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
வான்கதவுகள் திறப்பு
இதேவேளை தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் ஹப்புத்தளை – தியத்தலாவை வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri