பாதை அனுமதி காலவரையறையின்றி நிறுத்தப்படும் என பேருந்து சாரதிகளுக்கு எச்சரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு முரணாக, இருக்கை வசதிக்கு மேல் மற்றும் அதற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் பாதை அனுமதியை காலவரையறையின்றி நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒழுங்கை, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேருந்து சாரதிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இழப்புகளை ஈடுகட்ட நியாயமான பேருந்து கட்டண உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் குறித்த விதிகள் கடைபிடிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது நிலைமை மோசமாகிவிட்டது. எனவே அனைத்து
பேருந்துகளும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர்
வலியுறுத்தியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
