மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
616 கோடி ரூபா தாமத கட்டணம்
மேலும் கூறுகையில்,“10 மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரிப்பணம் அறவிடப்பட உள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேற்று (27.06.2023) அழைப்பு விடுக்கப்பட்டு 14 நாட்களுக்குள் அனைத்து பணத்தையும் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களிடம் இருந்து வரி மற்றும் தாமத கட்டணமாக 616 கோடி ரூபாவை அரசாங்கம் வசூலிக்க வேண்டியுள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியினுள் நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் அந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |