நாட்டில் ஏற்படவுள்ள அபாய நிலை: அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் ஓராண்டு காலத்தில் இலங்கையில் ஏற்படவுள்ள கடுமையான வரட்சி நிலைமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஓராண்டு காலத்தில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்துள்ளன.
பயிர்கள் விளைய முடியாத நிலை
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் விளைய முடியாத நிலை ஏற்படும். இந்த நாட்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகின்ற போதிலும் கடந்த காலத்தை விட விவசாயிகள் கடும் வரட்சி நிலைமையை எதிர்நோக்க நேரிடும்.
எனவே நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், டிசம்பர் இறுதியில் ஏற்படும் லானா எனப்படும் இயற்கையான காலநிலையை சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும், எனவே நீரை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri
