கனடாவில் இடம்பெறும் புதிய மோசடி குறித்து எச்சரிக்கை- உலக செய்திகள்
கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து கனடா பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸார் என்ற போர்வையில் குறித்த கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் என்ற போர்வையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் இந்த நபர்கள் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கரன்சி வகைகளில் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் இந்த மோசடிக்காரர்கள் நாடகமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே அடையாளம் தெரியாத நபர்களிடம் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம் என கோரியுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல உலக செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றையநாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு