பிழையான விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள்
சில வாகனங்கள் பிழையான விளம்பரங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எஞ்சின் கொள்ளளவு 50-க்கு குறைவான (48cc) மோட்டார் சைக்கிள்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என 50cc-க்கு குறைவான மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனத் தவறான விளம்பரங்களைச் செய்து விற்பனையாளர்கள் அவற்றை விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இத்தகைய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் இயக்க முடியாது.

அவ்வாறு இயக்கினால், அத்தகைய வாகனங்களுக்கு எதிராகச் சட்டம் நடைமுறைப்படுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளார்.
மேலும், வீதிகளில் வாகனங்களை இயக்கும் போது புகைச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் வருமான உரிமம் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும் என துஷார பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதிய வாகனங்கள் (ஒரு வருடத்திற்கு குறைவானவை), ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களுக்குப் புகைச் சான்றிதழ் தேவையில்லை.