மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..!

European Union Europe
By T.thibaharan Nov 10, 2026 02:24 PM GMT
Report

“யுத்தம் என்பது ஒரு விபத்தல்ல. அது ஒரு குறிப்பிட்ட மனித வாழ்க்கை முறையின் தர்க்கரீதியான விளைவு. நாம் யுத்தத்தை ஒழிக்க விரும்பினால், அந்த வாழ்க்கை முறையையே எதிர்த்துப் போராட வேண்டும்.”

என்ற போர் பற்றிய தத்துவக் கருத்தை அமெரிக்காவின் புகழ்பெற்ற அமைதிவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, தொழிலாளர் இயக்கத் தலைவர் மற்றும் போர் எதிர்ப்புச் செயற்பாட்டாளரான A. J. Muste பின்வருமாறு கூறினார்.

“War is not an accident. It is the logical outcome of a certain way of life. If we want to attack war, we have to attack that way of life.”. என்று யுத்தத்தின் அடிப்படை தத்துவத்தை குறிப்பிடுகிறார்.

அந்த வகையில் கடந்த வாரம் பிரித்தானியாவில் 3 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்குமாறு அரசு அறிவுறுத்திய செய்தியை அடுத்து பல்வேறு ஊடகங்களும் வகையில் பிரசுரிக்கும். அதில் உள்ள உண்மை என்ன? அது அவசரநிலைப் பிரகடனம் அல்லது உடனடியாகப் போர் வரப்போகிறது என்ற அறிவிப்பும் அல்ல.

அப்படியானால் உண்மையில் என்ன நடந்தது? அது கிழக்கு ஐரோப்பாவின் புவிசார் அரசியல் ஆளுகை அதிகார போட்டியின் நொதிப்பின் விளைவுகள் தான் மேற்கு ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

பிரித்தானியாவின் இன்றைய பிரதமர் Andy Burnham தலைமையிலான அரசாங்கம் 22 அக்டோபர் 2026 பிரித்தானிய அரசின் அமைச்சரவை அலுவலகத்தில்(Cabinet Officeல) இருந்து முக்கியமாக அறிவிப்பை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான பாதுகாப்பு அமைச்சர் Dan Jarvis. வெளியிட்டார்.

அது என்னவெனில்“Be Ready”(தயாராக இருங்கள்) என்ற திட்டப் பிரகடன அறிவுறுத்தல் என்பது அவசரநிலை ஏற்பட்டால் மக்கள் 72 மணி நேரம் (3 நாட்கள்) தங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களுடன் தங்களைத் தாங்களே சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும்.

வானிலை மாற்றங்கள்

இப்படியானால் பிரகடனம் எதற்காக அறிவிக்கப்பட்டது? என்ற கேள்வி எழுகிறது அல்லவா. அதற்கு ஆபத்து கால விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடுமையான வானிலை புயல், வெள்ளம், காட்டுத்தீ, மின்சாரத் தடை, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு பாதிப்பு, சைபர் தாக்குதல்கள் அரசின் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகளின் சேவைகள் பாதிக்கப்படுதல், போர் மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் அல்லது விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற காரணங்களால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இதற்கான முக்கிய காரணம் பிரித்தானிய எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தான். ஆனால் இதற்கு 27 அக்டோபர் 2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் Dan Jarvis தெளிவுபடுத்திய ஒரு முக்கியமான விடயம், “இந்த அறிவிப்பு குறிப்பிட்ட ஒரு உடனடி அச்சுறுத்தல் அல்லது உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் வெளியிடப்படவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

அரசு பொதுவான அவசரநிலைத் தயார்நிலையை அதிகரிக்கிறது. உடனடியாகப் போர் ஏற்படப்போகிறது என்பதல்ல என்று விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் யுத்தம் என்பது தற்செயலான திடீரென ஏற்படும் ஒரு விபத்து போன்ற நிகழ்வு அல்ல. பல்வேறு சமூக, அரசியல், அதிகார பொருளாதார முரண்பாடுகளின் நீண்டகாலமாக வளர்ச்சி இறுதியில் ஆயுத மோதலுக்கான புறநிலைகள் தோன்ற வழிவகுத்துள்ளது என்பதே உண்மையாகும்.

ஐரோப்பிய நாடுகளின் நடைமுறைகள்

ஒரு பெரிய பேரிடர் அல்லது அவசரநிலை ஏற்படும்போது மின்சாரம், குடிநீர் விநியோகம் தடைப்படலாம். கடைகள் திறக்க முடியாமல் போகலாம். போக்குவரத்து பாதிக்கப்படலாம்.

அவசர உதவிப் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகச் சென்றடைய முடியாமல் இருக்கலாம். எனவே முதல் 72 மணி நேரத்திற்கு மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதே. இதேபோன்ற அறிவுறுத்தல்கள் பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளன.

அப்படியானால் மேற்கு ஐரோப்பாவில் உண்மையில் போர் அச்சுறுத்தல் உள்ளதா? என்றால் ஆம் என்பதே பதிலாக உள்ளது. ஐரோப்பாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மை.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

ரஷ்யா – உக்ரைன் போர். NATO மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதற்றம். முக்கிய உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள். ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புத் தயார்நிலை அதிகரிப்பு மற்றும் 3 நவம்பர் 2026 அன்று ஐரோப்பிய ஆணையம் (European Commission) 72 மணி நேர அவசரநிலைத் தயார் நிலைக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதில் உணவு, குடிநீர், அவசரப் பொருட்கள் ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை பொதுவான பாதுகாப்புத் தயார்நிலை நடவடிக்கையேயன்றி உடனடியாகப் போர் தொடங்கப்போகிறது என்பதற்கான அறிவிப்பு அல்ல. ஆனால் ரஷ்யா - பிரித்தானியா எச்சரிக்கை அறிவிப்பு மோதல்கள் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

ஏனெனில் ரஷ்யா பிரித்தானியாவை எச்சரிப்பது வெறும் அரசியல் பேச்சாக மட்டுமல்லாமல், இராணுவ நகர்வுகள், உளவுக் கப்பல்கள், ஏவுகணை அச்சுறுத்தல்கள் மற்றும் NATO உடனான பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.

ரஷ்யா பிரித்தானியாவை நேரடியாகப் போருக்கு அழைப்பதைவிட, பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கும் இராணுவ உதவியைத் தடுக்கவும், NATO நாடுகளிடையே அச்சத்தை உருவாக்கவும், பிரித்தானிய அரசின் முடிவுகளை மாற்றவும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துகிறது.

இருப்பினும், இந்த நாடிகளின் தலைவர்களின் கருத்து அறிவிப்பு மோதல் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் இல்லை என்று கூறிவிட முடியாது. ஆயினும் அவற்றின்கும் எல்லைகள் உள்ளன.

ரஷ்ய - உக்ரைன் போர்

இங்கே ரஷ்யா ஏன் பிரித்தானியாவை எச்சரிக்கிறது? இதற்கான முக்கியமான பின்னணி உக்ரைன் போர். 2022 பிப்ரவரி 24ல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

அதன் பின்னர் பிரித்தானியா - உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கியது. இராணுவப் பயிற்சிகளை வழங்கியது. உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்தது.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஆதரித்தது. Storm Shadow போன்ற நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியது. ரஷ்யாவின் பார்வையில், பிரித்தானியா உக்ரைனின் போர் திறனை அதிகரித்து வருகிறது.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

பிரித்தானியாவின் பார்வையில், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு உதவுவது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நியாயமானது. இரு நாடுகளின் இந்த முரண்பட்ட நிலைப்பாடுகளே பதற்றத்தின் முக்கிய காரணம்.

ரஷ்யா வெளியிட்ட முக்கியமான எச்சரிக்கைகளை பார்த்தால் 27 ஓகஸ்ட் 2026ல் ரஷ்ய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் Maria Zakharova, உக்ரைன் பிரித்தானியா வழங்கிய Storm Shadow ஏவுகணைகளை ரஷ்ய இலக்குகளுக்கு எதிராகப் பயன்படுத்தினால், பிரித்தானிய இராணுவத் தளங்கள் மற்றும் உபகரணங்கள் ரஷ்யாவின் பதிலடி இலக்குகளாக இருக்கலாம் என எச்சரித்தார். 

NATO நாடுகளுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவின் ஏவுகணைத் தொழில்நுட்ப உதவி ரஷ்யாவுக்கு எதிரான மோதலை மேலும் தீவிரப்படுத்துகிறது என்று மாஸ்கோ கூறியது. 18 செப்டம்பர் 2026ல் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் பிரித்தானியத் தூதரகத்தின் துணைத் தலைவரை அழைத்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

உக்ரைனின் ரஷ்ய நிலப்பரப்பு தாக்குதல்களுக்கு உதவும் பிரித்தானிய வசதிகள் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என்று ரஷ்யா கூறியது.

30 செப்டம்பர் 2026ல் கலினின்கிராட் (Kaliningrad) பகுதியை NATO தனிமைப்படுத்த முயன்றால், ரஷ்யா அணு ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயாராக இருக்கும் என்று ரஷ்யா எச்சரித்தது.

இது பிரித்தானியாவை மட்டும் குறிவைத்த எச்சரிக்கை அல்ல. NATO நாடுகளுக்கு எதிரான பரந்த எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. 2 நவம்பர் 2026ல் பிரித்தானிய கடற்படையின்(Royal Navy) ரஷ்ய உளவுக் கப்பலான Viktor Leonov-ஐ ஸ்காட்லாந்தின் Outer Hebrides அருகே கண்காணித்தது. அத்தேடு ரஷ்யப் போர்க்கப்பல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட சரக்குக் கப்பல்களையும் பிரித்தானியக் கடற்படை கண்காணித்தது.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

இதன் பின்னணியில்த் தான் ரஷ்யா 5 வகையான அழுத்தங்கள் பிரயோகிக்கிறது.

  1. நேரடி இராணுவ அச்சுறுத்தலாக ரஷ்யா பிரித்தானிய இராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் உக்ரைனுக்கு உதவும் இராணுவ வசதிகள் தாக்கப்படலாம் என்று எச்சரிக்கிறது. இதன் மூலம் பிரித்தானியாவின் இராணுவ உதவியைத் தடுக்க முயற்சித்தல். பிரித்தானிய அரசின் அரசியல் முடிவுகளில் அழுத்தம் கொடுத்தல். ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்படுவதன் விலையை அதிகரிப்பதாகக் காட்டுதல்.
  2. ரஷ்யா பிரித்தானியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் உளவுக் கப்பல்களை இயக்குகிறது. 2026 ஜூலை மாதத்தில் ரஷ்ய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரித்தானியக் கடற்படை 21 நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் 25% அதிகரித்திருந்தன. இது ரஷ்யாவின் கடற்படைச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன என்பதற்கான முக்கியமான சான்று.
  3.  ரஷ்யாவும் பிரித்தானியாவும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள். ரஷ்யா தனது அணு ஆயுத வலிமையை வெளிப்படுத்துவதன் மூலம் NATO நாடுகள் நேரடியாக ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதனை இராணுவ ஆய்வில் Nuclear Deterrence (அணு ஆயுதத் தடுப்பு) என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் அணு ஆயுத அச்சுறுத்தல் என்பது அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறப்போகிறது என்று பொருளல்ல.
  4. ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதல் கப்பல்கள், விமானங்கள், ஏவுகணைகள் மட்டுமல்ல. மின்சார உள்கட்டமைப்பு. தொலைத்தொடர்பு. இணைய வங்கிச் சேவைகள். இராணுவத் தகவல் தொடர்பு. கடலுக்கடியில் உள்ள இணையக் கேபிள்கள். பிரித்தானியாவின் 2025 தேசியப் பாதுகாப்பு மூலோபாயம் ரஷ்யாவுடன் தொடர்புடைய சைபர் தாக்குதல்கள், நாசவேலை நடவடிக்கைகள் மற்றும் மறைமுகத் தாக்குதல்களை முக்கிய அச்சுறுத்தல்களாகக் குறிப்பிடுகிறது.
  5. ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் பிரித்தானிய நடவடிக்கைகளும் மோதலின் ஒரு பகுதியாக உள்ளன. பிரித்தானியா ரஷ்யாவின் Shadow Fleet என்று அழைக்கப்படும் தடைகளைத் தவிர்க்கும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணித்து வருகிறது. ரஷ்யா இதற்கு எதிராக தனது போர்க்கப்பல்களை அந்தக் கப்பல்களுடன் அனுப்புகிறது. இதனால் பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடற்பரப்பில் நேரடி மோதல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. 

நேரடி போர் இடம்பெறுமா...!

அப்படியானால் ரஷ்யா உண்மையில் பிரித்தானியாவுடன் நேரடிப் போர் செய்யுமா? என்றால் இல்லை மறைமுக மோதல் மாத்திரமே நடக்கும். அது சைபர் தாக்குதல்கள், உளவுக் கப்பல்கள் நடவடிக்கை, பொருளாதாரத் தடைகள், அரசியல் அச்சுறுத்தல்கள் நிகழும்.

அத்தோடு ஏற்கனவே நடைபெறும் மோதல்கள் பிருத்தானியாவுக்கு வெளியே கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ மோதல்களாக கடற்படை இடையூறு, வான்வெளி மீறல், சிறிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும். மாறாக பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் NATO என்ன செய்யும்? பிரித்தானியா NATO அமைப்பின் முக்கிய உறுப்பினராக உள்ளது.

NATO ஒப்பந்தத்தின் Article 5 படி, ஓர் உறுப்பினர் நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடந்தால் அது அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படலாம். ஆனால் இதன் பொருள் NATO உறுப்பினர்கள் அனைவரும் ஒரே விதமாகவும் தானாகவும் போரில் ஈடுபட வேண்டும் என்பதல்ல.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

ஒவ்வொரு நாடும் தேவையான நடவடிக்கையை எடுக்கிறது, அதில் ஆயுதப் படையைப் பயன்படுத்துவதும் அடங்கலாம்.

ரஷ்யா பிரித்தானியாவை நேரடியாகத் தாக்கினால் பிரித்தானியா தனது பாதுகாப்புப் படைகளைச் செயல்படுத்தும். NATO அவசர ஆலோசனைகளை நடத்தும். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட NATO நாடுகள் ஆதரவு வழங்கக்கூடும்.

மோதல் NATO - ரஷ்யா போராக விரிவடையும் அபாயம் ஏற்படும். இதுவே ரஷ்யா நேரடியாகப் பிரித்தானியாவைத் தாக்குவதற்கு எதிரான முக்கியமான தடுப்புச் சுவராக உள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டும். 

ரஷ்யா - பிரித்தானியா மோதல்

ரஷ்யா – பிரித்தானியா மோதலைப் புரிந்துகொள்ள மூன்று முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

  1.  ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் வெறும் பொய்யானவை என்று நிராகரிக்க முடியாது. ரஷ்யா உண்மையான இராணுவ வலிமையைக் கொண்ட நாடு, அதன் எச்சரிக்கைகள் பாதுகாப்பு அபாயத்தை உருவாக்குகின்றன.
  2. ரஷ்யாவின் நோக்கம் பிரித்தானியாவை அச்சுறுத்தி உக்ரைனுக்கான உதவியைக் குறைக்கச் செய்வதாக இருக்கலாம். அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ இலக்குகள் பற்றிய எச்சரிக்கைகள் இதற்கான அரசியல் அழுத்தக் கருவிகளாகச் செயல்படுகின்றன.
  3. பிரித்தானியா - ரஷ்யா நேரடிப் போர் என்பது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். NATO மற்றும் அணு ஆயுதத் தடுப்பு ஆகியவை இதனைத் தடுக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகவே தற்போதைய நிகழ்வுகள் ஐரோப்பாவில் பாதுகாப்புப் பதற்றம் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால் பிரித்தானியாவில் உடனடியாகப் போர் எதுமில்லை.

மேற்கு ஐரோப்பாவில் தயாராக இருங்கள் அறிவிப்பு போர் பதட்டமா..! | War Tension In Western Europe

72 மணி நேர அவசரநிலைத் தயார்நிலை என்பது விவேகமான முன்னெச்சரிக்கை மட்டுமே. அந்த அடிப்படையில் இன்றைய உலகம் அத்தகைய ஒரு போரை நோக்கி அத்தகைய ஒரு யுத்தத்தை நோக்கி நகர்வதாக தோன்றினாலும் இன்றைய சமூகப் பொருளியல் நிலையில் ஒரு முழு அளவிலான உலக மகா யுத்தத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லவே இல்லை என்பதை உண்மையாகும்.

ஆனால் பகுதியளவில் புவிசார் அரசியல் யுத்தங்கள் சக்தி வாய்ந்த நாடுகளால் நடத்தப்படுவது தொடர்கதையாகவே இருக்கும். மனித குலம் இந்த பூமி பந்தில் வாழும் வரை அந்த யுத்தம் தொடரும்.

வேண்டுமானால் யுத்த களத்தில் இறக்கின்ற மனிதனுக்கு மட்டுமே யுத்தம் இறுதியானது உயிர் வாழ்பவனுக்கு யுத்தம் தொடர்கதை ஆனது என்பதை முற்றிலும் உண்மையாகும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகும் அநுர அரசின் பட்ஜெட் - பீரிஸ் உறுதி

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகும் அநுர அரசின் பட்ஜெட் - பீரிஸ் உறுதி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு! இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு! இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US