மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்

Donald Trump United States of America Israel Iran
By Shadhu Shanker May 19, 2026 06:08 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், அமெரிக்கா அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் அழுத்தங்களை சந்தித்து வருகிறது.

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: இரு தரப்புடனும் கத்தார் தீவிர பேச்சுவார்த்தை

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: இரு தரப்புடனும் கத்தார் தீவிர பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம்

இந்த சூழலில், ஈரான் அணு ஆயுதத் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை ஈரான் ராணுவம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து 110 டொலரைத் தாண்டியது.

இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம் | War On Iran Again Secret Meeting In America

இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவல் கவனம் பெற்றுள்ளது.

இந்த வாரத்திலேயே புதிய தாக்குதல்கள் தொடங்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் மூன்று நாடுகளுக்கிடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.ஆனால் தற்போது நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளது.

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

ஈரான் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

 அவசர போர் திட்டங்கள்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனை கூட்டங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்று வருவதாகவும், ஈரான் மீது எவ்வகையான தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வார இறுதியில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிஐஏ இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் மற்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம் | War On Iran Again Secret Meeting In America

இந்த ஆலோசனையில் ஈரானின் எரிசக்தி நிலையங்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ இலக்குகளைத் தாக்கும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பென்டகன் அதிகாரிகள் அவசர போர் திட்டங்களையும் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகளை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் சிறப்பு படை நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க வீரர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்பதால், அதற்கு உள்நாட்டு எதிர்ப்பும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ஈரான் கடந்த ஒரு மாதமாக தனது ஏவுகணைத் தளங்களை வலுப்படுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல்

குறிப்பாக ஹார்முஸ் நீரிணை அருகிலுள்ள 33 ஏவுகணைத் தளங்களில் 30 இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையாக கருதப்படுகிறது.

உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து இந்த வழியாக நடைபெறுவதால், அங்கு ஏற்படும் பதற்றம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், உலக சந்தையில் எண்ணெய் விலை மேலும் கடுமையாக உயரும் அபாயம் நிலவுகிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம் | War On Iran Again Secret Meeting In America

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் உலக நாடுகளில் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மூலமாக மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த முக்கிய முன்னேற்றமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி மீண்டும் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US