யுத்தக் குற்றவாளிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்
இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (15.5.2026) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, முள்ளிவாய்க்கால் பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றாரகள். அவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
விசாரணை
உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூருவதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை இறுதி யுத்தத்தின்போது, யுத்த குற்ற மீறல்கள் இடம்பெற்று இருக்கின்றன. யுத்த குற்றமீறல்களில் இரண்டு தரப்பினரும் ஈடுப்பட்டிருக்கின்றனர் என்பதை, சர்வதேச நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றது.
யுத்த குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam