சற்றுமுன் ஆரம்பமானது லண்டன் கற்பகவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்
கிழக்கு இலண்டன் 'வோல்த்தம்ஸ்ரோ' கற்பக விநாயகர் ஆலயத்தின் 21 ஆவது வருடாந்த மகோற்சவமானது இன்று 15ஆம் திகதி (15.08.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
'வோல்த்தம்ஸ்ரோ' கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பல்லாயிரக்கான மக்களோடு மிகப் பிரம்மாண்டமாக 28 ஆம் திகதி(28.08.2022) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
தேர்த்திருவிழாவன்று கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் ஆகியன இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் கோவிலைச் சுற்றி இலவச வாகனத் தரிப்பிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர் ஆலய நிர்வாகத்தினர்.
அடியவர்களின் தாக சாந்திக்காக தண்ணீர் இ மோர்ப்பந்தல்கள் மற்றும் மதிய வேளை அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல வியாபார நிறுவனங்களின் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளது.
அடியவர்கள் அனைவரும் திருவிழாக்காலங்களில் சைவ ஆசாரசீலர்களாக வந்து கற்பக விநாயகரின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியர்கள்.










மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
