பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடைபவனி: தமிழ் உறவுகளிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளை காலை பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று மூன்றாவது நாளாகவும், முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரப் பிரகடனம் நடைபெற்று கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈத்த உறவுகளுக்கான கஞ்சிவாரம் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
12ஆம் திகதி தொடங்கிய இந்த கஞ்சிவாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முன்றலில் நிறைவடையவுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடை பவனிக்கு எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் பாதிரியார்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கடற்தொழில் சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், அனைத்து பொதுமக்களையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
நாளை காலை 9.30க்கு நடைபவனியானது பொத்துவிலில் ஆரம்பித்து திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் வருகைதந்து அன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி கல்லடி பாலத்தில் விநியோகிக்கப்பட்டு நாளை மறுதினம் திருகோணமலை நோக்கி பயணம் அமையும்.
17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லை தீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு உயிர்நீத்த, படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
இதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்தும் நடைபவனி ஆரம்பமாகி 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலினை வந்தடையும். இன்று எங்களுக்காகவும் தமிழ் உறவுகளுக்காகவும் இளம் தமிழ்ச்சமூகம் இந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டது எங்கள் உயிர்கள். கிழித்தெறிவதற்குக் கடிதாசிகளும் அல்ல, பிசைந்தெறிவதற்கு வேறு பொருட்களும் அல்ல. விலை மதிக்க முடியாத உயிர்களையே நாங்கள் தொலைத்து நிற்கின்றோம்.
இறுதி யுத்தத்தின்போது ஒரு இலட்சத்து 47ஆயிரம் உறவுகளுக்கு மேல் நாங்கள் இழந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்காலில் வரிசையில் கஞ்சிக்காகக் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என நீண்ட நின்றுகொண்டிருந்தபோது விமானப்படையினர் அவர்கள் மீது குண்டுவீசி அந்த வரிசையே இரத்த ஆறாக ஓடியது.
அங்கு
இருந்த பிள்ளையொன்று இறந்து கிடந்த தனது தாயில் கையிலிருந்த கஞ்சி கோப்பையினை
எடுத்து உண்ட காட்சியைக் கண்டவள் என்ற அடிப்படையில் இவ்வாறான சம்பங்களை
மறக்கமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் எமது உறவுகளுக்கு எந்த காலத்திலும்
நடக்கக்கூடாது'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
