இலங்கையிலும் ஆரம்பமாகவுள்ள "Walk For Peace''
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற "Walk For Peace'' சமாதான நடைபயணம் இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அரச அனுசரணையுடன் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் சமாதானத்திற்காக நடைபயணத்தை மேற்கொண்ட பௌத்த பிக்குமார்களின் பங்கேற்புடன் இந்த சமாதான நடைபயணம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள்
அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரச மரக் கன்று ஒன்றும் இந்த நடைபயணத்தில் எடுத்துச் செல்லப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகம் Clean Sri Lanka திட்டம், புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்குகின்றன.

இந்த நடைபயணத்தின் ஊடாக இலங்கையின் பௌத்த மரபுரிமைகள் மற்றும் பாரம்பரிய கலை அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சமாதான நடைபயணமானது "ஏஹிபஸ்ஸிகோ" (Ehipassiko) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam