உக்ரைன் வழியாக ஆசிய ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார யுத்தத்தை நடத்துகிறதா?
கடந்த மாத இறுதியில் பெல்ஜியம் தலைநகர் புருசேல்சில் நடந்த G7 மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் " இது ஒரு வர்த்தகப் போர் என்றும், எரிவாயுவுக்கான இராசதந்திர போர் என்று பேசியிருந்தார். அதில் பலதடவைகள் "எரிபொருள் வர்த்தக இராசதந்திரம் என கூறியிருததனை கவனிக்க வேண்டும்.
அந்த மாநாட்டில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் நாங்கள் வாங்காது விட்டால் நீங்கள் எரிபொருள் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கேட்டிருந்தன என்றும் பெல்ஜியத்தில் பேசிய ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இது அமெரிக்காவின் வெற்றி என்றும், றொனால்ட் றம்ப் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயுவை நிறுத்த முற்பட்டார். ஆனால் அப்போது அது சாத்தியப்படவில்லை. இப்போது அது சாத்தியப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவை உலகநாடுகளிலிருந்து ஒதுக்கிவைத்து அதன் வர்த்தகத்தை முடக்கியதுடன் நோட் ஸ்ரிம்- 02 ஐயும் நிறுத்தியது அமெரிக்காவின் வெற்றி என்றும் பேசியிருந்தார்.
மேலும் அமெரிக்க அதிபர் பேசும்போது இந்த வருடம் 15 பில்லியன் திரவ எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு தருவதாகவும், 2030 இல் 50 பில்லியன் கனமீற்றர் திரவ எரிவாயு தருவதாகவும் ஒப்புக்கொண்டார்.
கனடாவும் குறிப்பிடத்தக்க அளவு எரிவாயு வழங்குவதற்கு சம்மதித்திருப்பது வட, தென் அமெரிக்கா கண்டங்கள் ஐரோப்பாவுடன் நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவுகிறது என்றும் பேசியிருந்தமை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மீது வர்த்தகப்போரை நடத்துகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.
அத்துடன் G7 மாநாட்டில் கலந்து கொள்ளமுன் பைடன் பெண்டகனில் முக்கிய கலந்துரையாலை செய்துவிட்டு வந்ததாக "தி நியூயார்க் டைம்ஸ்" (02.04.22) கட்டுரை வரைந்திருந்தது.
அதில் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எரிபொருள் வர்த்தகம் செய்வது பற்றியும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றியும் ஆராயப்பட்டதாகவும் அங்கு எடுக்கப்பட்ட சாதகமுடிவுகளின் பின்னரே ஜோ பைடன் G7 மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஐரோப்பிய நாடுகளை தன்வசம் இழுக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அமெரிக்கா பெற்றதாகவும் இது பெண்டகனுக்கு கிடைத்த வெற்றி என்றும் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
இது அமெரிக்கா பிற நாடுகள் மீது வர்த்தகப் போரை நடத்துகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது இதற்கிடையில் கடந்த மாதம் 29ஆம் திகதி சிங்கப்பூர் பிரதமர் அமெரிக்க அதிபரை வெள்ளைமாளிகையில் சந்தித்துப் பேசியபோது ரஷ்யாவுடன் தாம் மேற்கொண்டிருந்த வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வதாகவும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் தெரிவித்ததானது.
ரஷ்யாவை உலக நாடுகளின் தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்தி அதன் பொருளாதார வளத்தை சிதைத்து ரஷ்யா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை தான் எடுத்துக்கொள்வதனூடாக உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை அமெரிக்கா திணிக்கிறது என்றே கூறலாம்.
மேலும் உலக நாடுகளால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் இலங்கை ரஷ்யாவிடமிருந்து எரிபொருள், தானிங்கள், உரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இதன்போது யு.எஸ்.எயிட் பணிப்பாளர் சமந்தா பவர் இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து பேசியபின் அவை கைவிடப்பட்டிருந்தன. அத்துடன் கடந்த மாதம் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 17 நாடுகளின் தூதுவர்கள் கூட்டத்தின் பின்னான கூட்டறிக்கையில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை கண்டிக்கவும், ரஷிய விமானங்களைத் தடை செய்யவும் வலியுறுத்தினர்.
இருந்தபோதும் இலங்கை ரஷிய விமானப் பறப்புக்களை தடை செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இதனால். அதன் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஏனெனில் கொரோணோவுக்கு பின்னர் ரஷிய சுற்றுலாத் துறையினரின் வரவு இலங்கையின் அந்நிய செலாவணியில் குறிப்பிட்ட செல்வாக்கு செலுத்தியது.
ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்காத இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மேற்குலக நாடுகள் கண்டும் காணாமல் பார்வையாளர்களாக இருக்கிறன. உலக நாணய நிதியமான IMF இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் மக்கள் போராட்டங்களை உன்னிப்பாக கவனிப்பதாக மட்டும் கூறியிருக்கிறது.
அத்துடன் தென் குவாட்ஸ் அமைப்பிலுள்ள இந்தியா, ஜப்பான் நாடுகளில் யப்பானிடம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஷக்லின் தீவின் கடலில் உள்ள இயற்கை கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டமான (ஜப்பான் - ரஷ்யா) ஷக்லின் 2 திட்டத்தை ஜப்பான் கைவிடவேண்டும் என அமெரிக்கா வற்புறுத்திய நிலையில் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதித்திருந்தது ஜப்பான்.
இதனால் கோபமடைந்த ரஷ்யா, யப்பானுடன் செய்யப்பட்ட 2ஆம் உலக மகாயுத்த கால ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம் என எச்சரித்ததோடல்லாமல் ரஷ்யா வசமிருக்கும் ஜப்பானுக்கு சொந்தமான 4 தீவுகளிலும் மேலதிக இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பையும் பலப்படுத்தி இத்தீவுக்கு வரும் ஜப்பானியர்கள் தம் தூதரகத்தில் இனி வீசா அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் அறிவித்தது.
இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்காத ஜப்பான் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படைநடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ரஷ்யாவுடனான ஷக்லின் -2 (எரிவாயு- எண்ணெய்) திட்டத்திலிருந்து வெளியேறும் திட்ட மேதும் தமக்கு இல்லை என்றும் யப்பானிய பிரதமர் பூமியோ கிஷிடா தெரிவித்திருந்ததுடன் நாட்டின் எதிர்கால எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இச்செய்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்திருந்தது என்பதை ரஷ்யாவுடனான எரிவாயு திட்டத்திலிருந்து ஜப்பான் விலகினால் எதிர்காலத்தில் யப்பானுக்கு எரிபொருள் வழங்குவது பற்றி அமெரிக்கா பரிசீலனை செய்யும் என அமெரிக்க காங்கிரசின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஓஸ்ரின் ஸ்கொட் தெரிவித்திருந்திலிருந்து உணரலாம்.
மேலும் குவாட் அமைப்பிலுள்ள இந்தியா, ரஷ்யா மீது பொருளாதார தடை மற்றும் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தவேண்டும் என அமெரிக்கா பல தடவைகள் எச்சரித்தும் இந்தியா அதை காதில் வாங்கியதாக இல்லை. மாறாக ரஷ்யாவுடன் தொடர்ந்தும் வர்த்தக உடன்படிக்கைகளை செய்கிறது.
கடந்த 02.04.22 ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வினை இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறைந்த நிலையில் 30லட்சம் பீப்பாய் கச்சாய் எண்ணெயை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த இருநாள் அரசுமுறைப் பயணத்தின் போது ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா விரும்பும் எந்தப் பொருளையும், ரூபிள் - ருபாய் பணங்களில் மாற்றீடு நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த இந்திய - ரஷிய உறவு அமெரிக்காவை கோபப்படுத்தியிருந்தாலும் தன்னால் ஒன்றும் செய்யமுடியாத திரிசங்கு நிலையில் அமெரிக்கா நிற்கிறது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை. பொருளாதார ரீதியில் சீனாவை பலமிழக்க செய்ய இந்தியா தேவை. இதனால் இந்தியா விடயத்தில் அமெரிக்காவில் அதட்டல்கள் பலிக்கவில்லை என்பதுடன் இந்தியாவுடன் செய்யப்பட்ட பல வர்த்தக உடன்படிக்கைகளும் கேள்விக்குள்ளாகுமாதலால் அமெரிக்கா மெளனமாக இருந்து நடப்பதை பார்ப்பவனாக நிக்கிறது.
கடந்த மாத இறுதியில் குவைத்தில் இடம்பெற்ற பெற்றோலிய மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு குவைத் பெற்றோலியத்தினை வழங்கும் என்றும் குவைத் தெரிவித்திருந்ததோடல்லாமல் உக்ரைனிய ஜனாதிபதி ஜலன்ஸ்கியை பேசவும் அனுமதித்திருந்தது.
இது ஏற்கனவே அமெரிக்காவால் தீட்டப்பட்ட திட்டம் எனவும் இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா வழங்கும் எரிபொருளை நிறுத்தி குவைத்திலிருந்தும், ஈரானிலிருந்தும் அவற்றை வழங்க அமெரிக்கா முடிவு எடுத்திருந்ததாகவும் இதன் மூலம் அமெரிக்காவுக்கு வரும் வருமானத்தில் 3% சலுகையாக கிடைக்கிறது.
இது ஆபத்தானது. ஐரோப்பிய நாடுகள் மீது ஒரு வகையான யுத்தத்தினை அமெரிக்கா மேற்கொள்கிறது. எனவே நாம் விழித்துக்கொள்ள வேண்டும் என ஜேர்மனியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் தெரிவித்திருந்ததனை கவனத்திற் கொள்ளவேண்டும். இங்கு 1996 இல் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை அமெரிக்கா கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதும் இந்தியா ஈரானிடமிருந்து தனக்கு தேவையான எரிபொருளை வாங்கியது இதை அமெரிக்கா கண்டும் காணாமல் விட்டுவிட்டது என்பது வரலாறு. மேலும் உக்ரைனில் நடக்கும் போரை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நடைபெறும் புலனாய்வுப் புரட்சி என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகாமைத்துவத்தின் தலைவர் (DIA) லெப்.ஜெனரல் ஸ்கொட் பெரியர் (Scott Berrier) குறிப்பிட்டதிலிருந்து கடந்த 35வருடங்களில் உக்ரைனில் இப்போது நடக்கும் போரில் துல்லியமாகவும், சரியான நேரத்திலும் புலனாய்வுத்துறை செயற்திறன் மிக்கதாக விளங்குவதனால் ரஷிய படையணிகளின் டாங்கிகளையும், விமானங்களையும் தாக்குவதற்கு இலகுவாக்கிவிட்டது என்றார்.
இதில் பேசிய மற்றொருவரான அமெரிக்க சைபர் கட்டளைப்பணியக பொறுப்பாளரும், தேசிய பாதுகாப்பு தலைவருமான (NDA) ஜெனரல் போல் நாகசோனி (poul Nakasone) எப்படித்தான் துல்லியமான புலனாய்வு தகவல்களை உக்ரேனுக்கு வழங்கினாலும் அதை ஒன்றிணைத்து தாக்குதல் நடத்துவதற்கு எமது பங்களிப்பு தேவைப்படுகிறது என்றார்.
உதாரணமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து அமெரிக்கா உக்ரேனிய சைபர் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கியதோடல்லாமல் இன்று வரை அவர்களை வழிநடத்துகிறார்கள் என்றும் தெரிவித்ததிலிருந்து உக்ரேன் போரை அமெரிக்காவே நடத்துகின்றது என்பது தெளிவாகிறது.
மேலும் அந்தச் சந்திப்பில் பேசிய அமெரிக்க காங்கிரசின் குடியரசுக் கட்சி பிரதிநிதி ஓஸ்ரின் ஸ்கொட் உக்ரேன் வருடம்தோறும் 50 மில்லியன் மெக்ரிக் தொன் கோதுமையை உலக உணவுத்திட்டத்திற்கு வழங்கும் மிகப்பெரிய விநியோகஸ்தர்.
இப்போரினால் உலக உணவுச் சந்தையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு தம்மீது போடப்பட்ட தடைகள் எடுக்கப்படும் வரை தானியங்கள் மற்றும் உரங்களை இனி ஏற்றுமதி செய்யப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்திருப்பதானது சிக்கலை ஏற்படுத்துவதாதவும், ரஷ்யாவும், பெலாரசும் சோளம், பார்லி, கோதுமை, சூரியகாந்தி விதை, உரம் உள்ளடக்கிய கருங்கடல் தானிய ஏற்றுமதிச் சந்தையை மூடுவதன் மூலமாக விளாடிமிர் புட்டின் மூன்றாம் உலகப் போரைத் தொடக்கியுள்ளார் என்றும் உலகச் சந்தையில் உக்ரேனிய போர் ஏற்படுத்திய தாக்கம் சண்டை நடைபெறும் இடத்திலிருந்து 4000 மைல்கள் தொலைவிலுள்ள இலங்கை வரை பாதித்ததோடல்லாமல் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் விதிவிலக்கல்ல. இதற்கு மாற்றீட்டு வழியை கண்டுள்ளோம்.
அமெரிக்கா, கனடா மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அவசரமான உணவுத் தேவைக்கான உற்பத்திகளையயும், எரிபொருள் தேவைகளையும் ஏற்றுமதி செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் என்று பேசியது. ஐரோப்பிய நாடுகளை நோக்கி அமெரிக்கா ஒரு வர்த்தகப் போரை ஆரம்பித்துவிட்டதனையே இவ்வுரைகள் காட்டுகின்றன.
பிரித்தானிய சைபர் உளவுப் பிரிவான BCHQ வினுடைய தலைவர் ஜெரமி பிளமிங் அவர்கள் அவுஸ்திரேலிய கன்பரா தேசிய பல்கலைக் கழகத்தில் பேசியபோது குறிப்பிட்டிருக்கின்றார்.
ரஷிய சனாதிபதி புட்டின் 01.04.22 முதல் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரூபிளிலேயே பணம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் தம் எரிபொருள் நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் முடிவடையும் வரை தாம் எரிபொருள் வழங்குவதாகவும் தெரிவித்தார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கண்டணம் தெரிவித்ததோடு ரூபிளில் தம்மால் ரஷ்யாவுடன் எரிபொருள் வாங்கமுடியாது என தெரிவித்திருந்தமை நினைவிருக்கலாம்.
ஆனால் இன்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குகிறது. ஆனால் யூரோவில் ரஷிய மத்திய வங்கி அவ் யூரோ பணத்தை ரூபிளில் மாற்றி ரஷிய எரிபொருள் நிறுவனமான Gazprom நிறுவனத்துக்கு வழங்குகிறது. இதுதான் ரூபிள் - யூரோ பிரச்சினை.
இதை அமெரிக்கா விரும்பவில்லை. மேலும் உக்ரேனிய தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள புச்சா நகரில் ரஷ்யா நடாத்திய மனிதப் படுகொலையை விசாரித்து அவர்கள் மீது போர்க் குற்றத்தை சாட்ட முயல்கின்றனர்.
இது போலவே ஈழத்திலும் 2009 இல் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டு அது அப்பட்டமான போர்க் குற்றம் என தெரிந்திருந்தும் வாயே திறக்காத மேற்குலகம் வீட்டோ அதிகாரம் உள்ள ரஷ்யா மீது எப்படித்தான் போர்க் குற்றம் சுமத்தப்பட்டாலும் அது தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நீர்த்துப்போகச் செய்திவிடும் எனத்தெரிந்தும் ரஷ்யா மீது அமெரிக்கா போர்க் குற்றம் சாட்டுகிறது.
ஈராக்கில் அமெரிக்க செய்த பேர்க்குற்றம் எப்படி இல்லாமல் செய்யப்பட்டது என்பது வெளிப்படை.
எனவே ரஷ்யா மீது அமெரிக்கா
பொருளாதார தடை விதித்து அதன்மூலம் ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு அது மேற்கொள்ளும் எரிவாயு வர்த்தகத்தை தடுத்து எதிர் காலத்தில் அவற்றினை தான் விநியோகம் செய்ய இந்நாடுகள் மீது அமெரிக்கா வர்த்தகப் போரினை நடத்துகிறது எனத் தெரிகின்றது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
