மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள இராதாகிருஷ்ணன்
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரசார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி முன்னர் பேசிய விடயங்களை தீர்ப்பதற்கு ஜனாதிபதி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பள பிரச்சினையும் தீரவில்லை.
மலையக மக்களுக்கான ஆணைக்குழு
எனவே, இது தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், விழிப்படைய வைக்க வேண்டும். பட்டலந்த விசாரணை ஆணைக்குழு பற்றி தற்போது பேசப்படுகின்றது. ஜே.வி.பியின் 54 தொழிற்சாலைகளை எரித்தனர், பல உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, மலையக மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு வேண்டும். இந்நாட்டில் போரின்போதும், ஜே.வி.பி. கலவரத்தின்போது எமது மக்கள்தான் கொழுந்து எடுத்து நாட்டுக்கு வருமானம் உழைத்து கொடுத்தனர்.
கோவிட் காலத்தில்கூட உழைத்தனர். எனவே, எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையை பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
