பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள புலம்பெயர் தமிழர் கழகங்களின் கரப்பந்தாட்ட போட்டி(Photos)
30 வருட பிரித்தானிய தமிழர்களின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக புதிய அறிமுகமாக Volleyball Premier League [VPL என்னும் மாபெரும் Over Game கரப்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலண்டன் Southall - Domers Wells Leisure Centre இல் உள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளை VPL UK ஏற்பாட்டுக் குழுமம் செய்து வருகின்றது.
புலம்பெயர் தமிழர்களின் கழகங்கள்
முன்னதாக பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் புலம்பெயர் தமிழர்களால் இயங்கப்பட்டுவரும் பல்வேறு கழகங்களிற்காக விளையாடிவரும் [சுமார் 35 கழகங்கள்] பலம்வாய்ந்த மற்றும் அனுபவமிக்க சுமார் 72க்கு மேற்பட்ட வீரர்களை, அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட பன்னிரண்டு VPL சிறப்பு அணிகளை வழிநடத்திவரும் 12 அணியின் உரிமையாளர்களும் 12 அணிக்கான அணிமுகாமையாளர்களும் இணைந்து ஏலமுறையில் பெற்றிருந்தனர்.
VPL UK போட்டிகளை நடாத்தும் விதிகள் தொடர்பில் அனைத்து VPL UK அணிகளுக்கும் பலசுற்று கலந்துரையாடல்களூடாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நடைமுறைகள் தொடர்பாக VPL UK நடத்துனர் குழுவினால் அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த VPL UK போட்டியில் பன்னிரண்டு VPL UK சிறப்பு அணிகள் பங்குபற்றுகின்றன.
இந்த 12 அணிகளும் குலுக்கல் முறைமூலம் இரு குழுக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
தெரிவுப்போட்டிகள்
தெரிவுப்போட்டிகள் அனைத்தும் 5A Side மற்றும் 4A side என இருபிரிவாக நடைபெறுகிறது.
தெரிவுப்போட்டிகளில் A மற்றும் B குழுக்களின் கீழுள்ள அணிகள் தனித்தனியாக மோதுகின்றன.
ஒவ்வொரு குழுக்களிலும் 5 போட்டிகள் வீதம் நடைபெற்று, A, B ஆகிய இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும், நான்கு அணிகள் அரை இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
அதன் பின்னர், இறுதிப்போட்டிக்கு A, B குழுக்களில் முதன்மை இடத்தினை பெற்றுக்கொள்ளும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
பணப்பரிசில்களும் வெற்றிக்கேடயங்களும்
இதேவேளை முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் தீர்மானிக்கப்படுவதுடன், போட்டியின் ஆட்டநாயகன், தொடர்ஆட்ட நாயகன் ஆகியோர்கள் தெரிவுசெய்யப்பட்டு, போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், வெற்றிக்கேடயங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இப்போட்டியில் அனுபவம் மிக்க வீரர்கள் பங்குபற்றுவதனால் தெரிவுப்போட்டிகள் மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமானதாகவும் நடைபெறவுள்ளதாக VPL UK ஏற்பாட்டுக்குழுவினர் அறியத்தந்துள்ளனர்.
சமநேரத்தில் இப்போட்டிகளை தொலைக்காட்சி நேரலைமூலம் VPL UK இன் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தினை தொடர்வதனூடாக உலகின் எப்பாகத்திலிருந்தும் பார்வையிடலாம்.
5A Side தெரிவுப்போட்டிக்கான குழுக்கள்
குழு A
1. தாய் மண்
2. யுனைட்டட் றைடர்ஸ்
3. இணைந்த கரங்கள்
4. ரோமியோ நவம்பர்
5. யுகே தமிழ் யுனைட்டட்
6. ஒஸ்கார் லீமா
குழு B
1. தமிழ்ப்பாலம்
2. கோல்டன் ஈகிள்ஸ்
3. வொலிபோல் கிங்ஸ்
4. இசைத்தமிழ்
5. மருதம்
6. லண்டன் பயர்
4A Side தெரிவுப்போட்டிக்கான குழுக்கள்
குழு A
1. தமிழ்ப்பாலம்
2. லண்டன் ஃபயர்
3. தாய் மண்
4. இசைத்தமிழ்
5. யூகே தமிழ்ஸ் யுனைற்றட்
6. யுனைட்டட் றைடர்ஸ்
குழு B
1. கோல்டன் ஈகிள்ஸ்
2. இணைந்த கரங்கள்
3. ஒஸ்கார் லீமா
4. றோமியோ நவம்பர்
5. மருதம்
6.வொலிபோல் கிங்ஸ்
V P L - UK போட்டிகளின் அணித்தலைவர்கள்
ஒஸ்கார் லீமா - ஜீவா
மருதம் - மன்னன்
யுனைட்டட் றைடர்ஸ் - மெஸ்ஸி
கோல்டன் ஈகிள்ஸ் - அருளீஸ்
இசைத்தமிழ் - ஜூலியட்
இணைந்த கரங்கள் - பகீர்
வொலிபோல் கிங்ஸ் - ராஜ்
தாய் மண் - அப்பன்
தமிழ்ப்பாலம் - சுபாஸ்
றோமியோ நவம்பர் - ராஜித்
யூகே தமிழ்ஸ் யுனைற்றட் - சேகர்
லண்டன் ஃபயர் - ஜீவன்
VPL UK நிர்வாக குழுமம்
1. சிவகுமார் சுரேந்திரன்( சுரேன்)
2. ஜெயரட்ணம் சுரேஷ்குமார் (சுரேஷ்)
3. கந்தசாமி ஜெயராஜன் (குட்டி)
4. சிவபாலன் ஜெயவதனன் (வதனன்)
5. யோகானந்தன் குகானந்தன் (குகன்)
VPL UK போட்டிக்காக அமைக்கப்பட்ட 12 சிறப்பு அணிகளும் அதன் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களின் விபரங்கள்
1. தமிழ்ப்பாலம்
உரிமையாளர் -நாகராசா தவநேசன்
முகாமையாளர் - கதிர்காமமுத்தையா சண்முகசுந்தரம்.
2. மருதம்
உரிமையாளர் - சிங்கநாயகம் மன்னன்
முகாமையாளர் - தங்கராயா துஷ்யந்தன்.
3. ஒஸ்கார் லீமா
உரிமையாளர் - ரஞ்சன் தியாகராஜா
முகாமையாளர் - குகன் தர்மலிங்கம்
4. றோமியோ நவம்பர்
உரிமையாளர் - யோகானந்தன்
குகானந்தன் முகாமையாளர் - குமரகுரு குமார்
5. யூகே தமிழ்ஸ் யுனைட்டட்
உரிமையாளர் - ஞானேஸ்வரன் அருளானந்தம்
முகாமையாளர் - இந்திரன் பூபாலப்பிள்ளை
6. இசைத்தமிழ்
உரிமையாளர் - திலீசன் ஹரி
முகாமையாளர் - நந்தகுமார் நமசிவாயம்
7. இணைந்த கரங்கள்
உரிமையாளர் - சிரஞ்சீவ் குலவீரசிங்கம்
முகாமையாளர் - மணாளன் தங்கவடிவேல்
8. லண்டன் ஃபயர்
உரிமையாளர் - தீபன் சிவா
முகாமையாளர் -
9. கோல்டன் ஈகிள்ஸ்
உரிமையாளர் - விமல்ராஜ் நல்வேலளகன்
முகாமையாளர் - குணசேகரன் செல்லத்துரை
10. தாய் மண்
உரிமையாளர் - தவராசா கோபாலசிங்கம்
முகாமையாளர் - நேசரஞ்சன் சுப்பிரமணியம்
11. வொலிபோல் கிங்ஸ்
உரிமையாளர் - கிரிதரன்
முகாமையாளர் - கேதீஸ்
12. யுனைட்டட் றைடர்ஸ்
உரிமையாளர் - அருளானந்தன் வசந்தன்
முகாமையாளர் - சிவஞானசுந்தரம் செல்வக்குமாரன்