கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம்!
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்று முடிந்துள்ளன.
அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.64 வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, கல்குடா தொகுதியில் 84,402 பேர் வாக்களித்துள்ளனர்.
62.94 வீத மட்டக்களப்பு தொகுதியில் 138,788 பேர் வாக்களித்துள்ளனர். 65.69 வீத பட்டிருப்பு தொகுதியில் 63,004 பேர் வாக்களித்துள்ளனர்.
60.41 வீத மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 வாக்காளர்களில், இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் 286,194 பேர் வாக்களித்துள்ளனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 65வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 46 வாக்கெண்னும் நிலையங்களில் வாக்கெண்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்காக 37 வாக்கெண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 63.44 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்களிப்பு மாலை 4 மணிக்கு முடிவடைந்ததும் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்தியஸ்தானமான இந்து கல்லூரிக்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 56 வேட்புமேனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அதில் 22 அரசியல் கட்சிகளினதும், 27 சுயேட்சைக் குழுக்களினதுமாக மொத்தம் 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இம்முறை 392 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-ருசாத்
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை 7.00 மணி முதல் 12.30 வரையிலான வாக்குப்பதிவுகளின் நிலவரப்படி 25% சதவீதமான வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை மற்றும் பொத்துவில் அம்பாறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் வாக்காளர்களின் எண்ணிக்கை 555432 ஆகும்.
மற்றும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 07 ஆகும்.மொத்தமாக 64 அரசியல் கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-பாறுக் ஷிஹான்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் 67.1 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
[
மாலை 4.30 அளவில் தபால் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், தபால் வாக்கு முடிவுகளை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் சுறுசுறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகின்றது.
இந்த மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
36 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக திருகோணமலை விபுலானந்த கல்லூரி செயற்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.