யாழில் தன்னார்வலர்களின் நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டுக்கள்
யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது பராமரிப்பு இன்றி புற்கள் வளர்ந்த நிலையில் காணப்பட்டது.
இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தன்னார்வ ரீதியாக முன்வந்த நினைவாலயம் இளைஞர் அலை அமைப்பினர் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்த செயற்பாடு பாராட்டை பெற்று வருகிறது.
நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது.
அதன் வெளிப்பாடாகவே இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
