இன்று மாபெரும் தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா! பீட் ஹெக்ஸெத்தின் அறிவிப்பால் பெரும் பதற்றம்
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் மீது இன்றுதான் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
வெள்ளைமாளிளையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கடுமையான தாக்குதல்கள்
மேலும் நாளை தாக்குதல்கள் இன்னும் கடுமையாக இருக்கும் என்றும், அப்போதுதான் ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (0100BST) வரை ட்ரம்ப் காலக்கெடு நிர்ணயித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க விமானியை மீட்பதற்குத் தேவைப்பட்ட திறமையையும் துல்லியத்தையும் பாராட்டிய பீட் ஹெக்ஸெத் ஈரானின் இராணுவம் தர்மசங்கடத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகியுள்ளது,அவர்கள் அப்படி இருப்பது நியாயமே, என்று ஹெக்ஸெத் குறிப்பிட்டுள்ளார்.
இது ஈரானின் உட்பகுதியில் நடந்த சம்பவம் என்றும், அப்போது அந்த விமானப்படை வீரர், "கடவுள் நல்லவர்" என்ற செய்தியை அனுப்புவதற்காகத் தனது டிரான்ஸ்பாண்டரை இயக்கினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானி மீட்கப்பட்ட திகதிகள் ஈஸ்டர் வார இறுதியில் நிகழ்ந்ததை ஹெக்ஸெத் குறிப்பிடுகிறார். துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியிலும் குழுவினர் கிட்டத்தட்ட பிழையின்றி செயல்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.