காணமலாக்கப்பட்ட உறவுகளுடைய போராட்டத்தில் குழப்பம் விளைவித்த நபர் தொடர்பில் விமர்சனம்
வவுனியாவில் இடம்பெற்ற காணமலாக்கப்பட்ட உறவுகளுடைய போராட்டத்தில் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு இன்று (03.10.2024) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும்,
இப்படியான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள், நியாயமான காரணங்களுக்காக ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நடாத்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்படுகின்றது.
கண்டனம்
தமிழ் மக்களை மிரட்ட முனையும் இலங்கையின் தேசியப் புலனாய்வளர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இவ்வாறான அடக்குமுறைகளை 'அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு' வன்மையாக கண்டிக்கின்றது.

இவற்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இலங்கை அரசும், ஜே.வி.பி கட்சியினரும் தொடர முனையும் பட்சத்தில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தனது ஆதரவாளர்களுடன் காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களோடு தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்பதைக் கூறி வைக்க விரும்புகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri