பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது சிறப்பானது: வடக்கு ஆளுநர் வலியுறுத்து
பிள்ளைகளைப் பராமரிப்பதோடு அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் வழங்குவது சிறப்பானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று(20.05.2025) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். காலத்தின் சூழலாக அது மாறியிருக்கின்றது. அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது.
தொழில்வாய்ப்பு
எஸ்.ஓ.எஸ். தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வெளியேறும் மாணவர்கள், தங்கள் தொழில்துறையை எப்படி அமைத்துக்கொள்கின்றார்கள் என்பதில் தான் இந்தப் பயிற்சியின் வெற்றி தங்கியிருக்கின்றது.
என்.வி.க்யூ. தரச் சான்றிதழைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியும். மேலும் கற்கைகளையும் தொடரமுடியும்.
இந்தச் சான்றிதழைப்பெற்று தொழில் தகைமையுள்ளவர்களாக மாறியுள்ள நீங்கள், நாளை பலருக்கு தொழில்வாய்பை வழங்கக் கூடிய தொழில்முனைவோராகவும் மாறவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









