தொழிற்பயிற்சி நிலையம் இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு (Photos)
ஜனாதிபதியின் வழிகாட்டலில் விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலையில் தொழிற்பயிற்சி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் (K.Karunakaran) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய்கள் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிலையத்தினை திறந்து வைத்தார்.
ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்கள் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 141 மில்லியன் நிதி உதவி மூலம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் ஒன்பதாவது நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷேட தேவையுடைய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்களுக்கு தையல் பயிற்சி மற்றும் மின் உபகரண திருத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
16 வயது தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் தங்குமிடம், சாப்பாட்டு வசதிகள், தினசரி பராமரிப்பு உள்ளிட்டவை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தையல் பயிற்சி மற்றும் மின் உபகரண திருத்தல் போன்ற பயிற்சி நெறிக்கான உபகரணங்களுக்கான நிதியுதவியினை கரனெ நிறுவனம் வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் பிரதேச பாடசாலை மாணவர்ளால் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, அவர்களுக்கு பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளால் பழ மர கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன ரணவீர ஆராய்ச்சி, ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்கள் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்தன, வாழைச்சேனை பிரதேச
சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் எஸ்.மணிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செலகங்களின் பிரதேச செயலாளர்கள், சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri