பிரித்தானியாவை தாக்க தயாராகும் புடினும்- பிரித்தானியா வெளியிட்ட அவசர எச்சரிக்கையும்..! (Video)
பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தப்போகிறது என்கின்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே உலகின் பிரதான ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.
அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய இதுபோன்ற செய்திகள் ஒருபக்கம் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய அரசாங்கம் விடுத்திருந்த ஒரு அவசர அறிவிப்பும் மேலும் பிரித்தானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்திருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.04.2023) மாலை 3.00 மணிக்கு பிரித்தானியாவில் வசிக்கும் அனைவரினது தொலைபேசிகளிலும் ஒரு பரீட்சார்த்த அவசர எச்சரிக்கை எழுப்பப்படும் என்றும் அனைத்து தொலைபேசி இணைப்புகளின் வலையமைப்புக்களும் பிரித்தானிய அரசாங்கத்தினால் இடைமறிக்கப்பட்டு அந்த பரீட்சார்த்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தலாம் என்கின்ற எச்சரிக்கைகள் பரவலாக வெளிவரும் நிலையில் ஒரு அவசர எச்சரிக்கை நடைமுறையை பிரித்தானிய அரசாங்கம் பொதுமக்கள் இடையில் அறிமுகப்படுத்தி இருப்பதானது பிரித்தானிய மக்கள் இடையே ஒரு அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளுமா?
பிரித்தானியா மீது தாக்குதல்களை மேற்கொள்வோம் என்று ரஷ்யாவும், ரஷ்யா ஜனாதிபதி புடினும் அடிக்கடி கூறிவருவது வெறும் எச்சரிக்கைக்காக தானா? அல்லது உணமையிலே பிரித்தானிய மீது தாக்குதலை நடத்தும் எண்ணம் ரஷ்யாவிற்கு இருக்கின்றதா?
எதற்காக ரஷ்யா, பிரித்தானிய மீது இத்தனை எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்?
பிரித்தானிய மீது ரஷ்யா அப்படியொரு தாக்குதலை மேற்கொண்டால் அதனை தடுக்கும் வல்லமை பிரித்தானியாவிடம் இருக்கின்றதா?
இந்த கேள்விகளுக்கான பதிலைதான் ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்,