மரணத்தின் விளிம்பில் விளாடிமிர் புடின்! கசிந்த மருத்துவ அறிக்கையால் ஏற்பட்ட பரபரப்பு
கடந்த ஆண்டு ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை எப்போதும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
தற்போது வெளியான புதிய மருததுவ அறிக்கையின் படி அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னும் மூன்று ஆண்டுகள் அவர் உயிருடன் இருப்பார்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு "தலையில் கடுமையான வலி, மங்கலான பார்வை மற்றும் நாக்கு உணர்வின்மை" போன்ற பிரச்சினைகளினால் அவர் அவதிப்படுவதாகவும், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகள் அவர் உயிருடன் இருப்பார் என அந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் வேளையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
‘‘புடின் தனது வலது கை மற்றும் காலில் பகுதியளவு உணர்வை இழந்துள்ளதாகவும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும், வைத்தியர்கள் குழு முதலுதவி செய்ததாகவும், புடினுக்கு மருந்து எடுத்துக்கொண்டு பல நாட்கள் ஓய்வெடுக்கவும் உத்தரவிட்டதாகவும்‘‘ குறிப்பிடப்படுகின்றது.
ஆரோக்கியத்துடன் இருக்கும் புடின்
இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி ஓய்வெடுக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான மார்காவின் கூற்றுப்படி, ரஷ்ய ஜனாதிபதி புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயுடன் போராடுகிறார் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், கிரெம்ளினும் ரஷ்ய அமைச்சரும் மீண்டும் மீண்டும் சுகாதார அறிக்கைகளை உடைத்து, ரஷ்ய ஜனாதிபதி பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.