வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் நடந்த கொலை!! பதில் தேடும் மட்டக்களப்பு மக்கள்!!
மட்டக்களப்பில் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்காளாவின் முன்னால் ஒரு படுகொலை நடைபெற்றிருக்கின்றது.
ஒரு தமிழ் இளைஞன் வியாழேந்திரனின் பிரத்தியோக பாதுகாப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
கொல்லப்பட்டவர் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சராக உள்ள நாட்டின் பிரஜை. வியாழேந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தின் குடிமகன்.
எனவே கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு வியாழேந்திரனுக்கு இருக்கின்றது.
ஒரு மக்கள் பிரதிநிதியாக தனது சொகுசு பங்களா முன்பு நடைபெற்ற படுகொலைக்கு பதில்வழங்கவேண்டிய பொறுப்பு கௌரவ வியாழேந்திரனுக்கு இருக்கின்றது.
- வியாழேந்திரனின் பிரத்தியோக பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் வியாழேந்திரனுக்கு முன்னரே அறிமுகமானவரா? •
- எதற்காக அந்த இளைஞன் வியாழேந்திரனின் வீட்டிற்கு சென்றான்?
- அதுவும் வியாழேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவன் எதற்காக வியாழேந்திரனின் வீட்டிற்கு சென்றான்?
- அந்த இளைஞனுக்கும் வியாழேந்திரனுக்கும் ஏதாவது முன்விரோதம் உள்ளதா?
- அந்த இளைஞன் வியாழேந்திரனின் கட்சியைச் சேர்ந்தவரா?
- எதற்காக அந்த இளைஞனை வியாழேந்திரனின் பாதுகாவலர் சுட்டார்?
- வியாழேந்திரன் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் வசித்துவரும் இளைஞனை படுகொலை செய்த காவல் வீரருக்கு தண்டணை வாங்கிக்கொடுப்பதற்கு வியாழேந்திரன் ஏதாவது முயற்றி செய்தாரா?
- ஊடக அறிக்கை வெளியிட்டதைக் கடந்து வேறு ஏதாவது நடவடிக்கை ஒரு பிரதி அமைச்சர் என்ற கோதாவில் வியாழேந்திரனால் எடுக்கப்பட்டதா?
- வியாழேந்திரனது மாவட்டத்தின் தமிழ் இளைஞனை சுட்டுக் கொன்ற சிறிலங்கா காவல்துறையைக் கண்டித்து வியாழேந்திரன் ஏதாவது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடுசெய்ய உள்ளாரா?
- கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதி வழங்கவேண்டும் என்று கோரி, காவல்துறைக்கும், ஜனாதிபதிக்கும் மாவட்ட பிரதிநிதியாக வியாழேந்திரன் ஏதாவது அழுத்தம் கொடுத்துள்ளாரா?
- கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதிவேண்டி வியாழேந்திரன் நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பாரா?
- வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக உள்ள பொது வீதியில் வாகனத்தில் பயணம் செய்யும் நபர்கள் வாகனத்தை விட்டு இறங்கி நடந்து செல்லவேண்டும் என்று வியாழேந்திரனின் பிரத்தியோக காவல்வீரர்கள் வலியுறுத்துகின்றார்களாமே; அது உண்மையா? •
- அப்படியான கட்டளையை யார் பிறப்பித்தது?
- வியாழேந்திரன் பிறப்பித்த கட்டளையா அது? •
- குடும்பம்பத்தார் உங்கள் வீட்டின் CCTV பதிவை கேட்கின்றனர் அதனை வெளிப்படுத்தாமைக்கு இரகசிய காரணம் உண்டா?
இந்தக் கேள்விக்கான பதிலை வியாழேந்திரனுக்கு வாக்களித்த அவரது மாவட்ட மக்களும், ஊடகவியலாளர்களும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.